ஜாக்கி சான் உயிரிழந்ததாக பரவிய வதந்தி.. இப்போது என்ன செய்கிறார்?
- நம் அனைவரின் இதயங்களையும் வென்ற சிறந்த நடிகர், குங்ஃபூ போர்வீரன், சிரிப்பின் மன்னன் ஜாக்கி சான் இன்று காலமானார்" என்று கூறப்பட்டது.
- அவரது குடும்ப உறுப்பினர்கள் இதை உறுதிப்படுத்தியதாக அந்தப் பதிவில் கூறப்பட்டது.
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்த சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான்(71 வயது) இறந்துவிட்டதாக நேற்று முன் தினம் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவமனை படுக்கையில் படுத்திருக்கும் ஜாக்கி சான் புகைப்படத்துடன் இருந்த அந்த பேஸ்புக் பதிவில், "உலக சினிமாவில் மிகவும் பிரியமான நபர், நம் அனைவரின் இதயங்களையும் வென்ற சிறந்த நடிகர், குங்ஃபூ போர்வீரன், சிரிப்பின் மன்னன் ஜாக்கி சான் இன்று காலமானார்" என்று கூறப்பட்டது.
அவரது குடும்ப உறுப்பினர்கள் இதை உறுதிப்படுத்தியதாக அந்தப் பதிவில் கூறப்பட்டது.
இருப்பினும், இந்த செய்தி முற்றிலும் தவறானது என்றும், அவர் பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
எனவே சமூக ஊடகங்களில் ரசிகர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். "பேஸ்புக் ஏன் ஜாக்கி சானைக் கொல்ல முயற்சிக்கிறது?" என்று ஒரு பயனர் கேலியாக வினவியுள்ளார்.
தற்போது 'நியூ போலீஸ் ஸ்டோரி 2', 'ப்ராஜெக்ட் பி' மற்றும் 'ஃபைவ் அகெய்ன்ஸ்ட் எ புல்லட்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். 'ரஷ் ஹவர் 4' படத்திலும் அவர் மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது.