சினிமா செய்திகள்

ஏழை மாணவர்களின் கல்விக்காக ரூ.3,400 கோடி சொத்துகளை வழங்கிய ஜாக்கி சான்

Published On 2025-05-26 10:34 IST   |   Update On 2025-05-26 10:34:00 IST
  • புரூஸ் லீ-க்கு பிறகு அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர், ஜாக்கிசான்.
  • ஜாக்கிசான் தனது சொத்தை நன்கொடையாக அளித்துள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.

புரூஸ் லீ-க்கு பிறகு அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர், ஜாக்கிசான். உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

'1985', 'போலீஸ் ஸ்டோரி', 'டிரங்கன் மாஸ்டர்', 'ரஷ் ஹவர்', 'கராத்தே கிட்' போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவரது படங்கள் உலகம் முழுவதும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு வருகிறது. ஜாக்கிசான் நடிப்பில் 'கராத்தே கிட்-2' படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் ஜாக்கிசான் தனது சொத்தை நன்கொடையாக அளித்துள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.

அவர் தனது ரூ.3,400 கோடி சொத்துகளை ஏழை மக்களின் படிப்புக்காகவும், இயற்கை பேரிடர்களுக்கும் தனது ஜாக்கிசான் சாரிடபிள் பவுண்டேஷன் மூலம் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "சிறிய வயதில் வறுமையால் தவித்திருக்கிறேன். அந்த கஷ்டம் எனக்கு தெரியும். நான் பட்ட கஷ்டங்கள் மற்றவர்கள் படக்கூடாது என்பதால்தான் இந்த முயற்சி. மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது வரும் சந்தோஷம் அளவிட முடியாதது'', என்று குறிப்பிட்டார். ஏழை மக்களுக்காக தனது சொத்துகளை வழங்கியுள்ள ஜாக்கிசானுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags:    

Similar News