சினிமா செய்திகள்

தனுஷ்க்கு ஒருவரை பிடித்துவிட்டால், உதவிக்காக எந்த எல்லைக்கும் போவார்- அருண் விஜய்

Published On 2025-09-24 20:40 IST   |   Update On 2025-09-24 20:40:00 IST
  • இட்லி கடை படம் அக்டோபர் 1அம் தேதி ரிலீஸ் ஆகிறது.
  • இப்படத்தில் அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தனுஷ் நடித்து இயக்கியுள்ள படம் இட்லி கடை. இப்படம் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அருண் விஜய், தனுஷ் குறித்து பேசியதாவது:-

தனுஷ் ஒரு உண்மையான மனிதர் (True Person) என்று சொல்லனும்னா, அவருக்கு ஒருவரை பிடிச்சிருக்குனா எந்த அளவுக்கும் போய், உதவி செய்ய வேண்டும் என நினைக்கிறவர். எப்படி பட்டவர்னு அப்போதுதான் எனக்கு தெரிந்தது.

என்னுடைய அடுத்த படமான "ரெட்ட தல"-யில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார். கண்ணம்மா, கண்ணம்மா பாடல் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் முடிந்துவிட்டது, அந்த ஒரு பாடல் மட்டும் இருந்தது, எனது டீம் அனைவரும் தனுஷ் இந்த பாடலை பாடினால் நன்றாக இருக்கும் என்றார்கள்.

அவரிடம் கேட்பதற்கு எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. நான் பொதுவாக யாரிடமும் எதையும் கேட்கமாட்டேன். உங்களை அவருக்கு ரொம்ப பிடிக்கும். அவரிடம் சென்று கெளுங்கள் சென்றார்கள். டியூன்-ஐ அவரிடம் போட்டு காண்பித்து நீங்கள் படினால் நன்றாக இருக்கும் பிரதர் என்றேன்.

உடனே பண்றேன் என்றார். நான் எப்படி அவருக்கு உடனடியாக பண்றேன் என்று சொன்னனோ, அதேபோல் அவரும் சொன்னார். நீங்கள் எனக்கு பண்ணியிருக்கிறீர்கள். நான் உங்களுக்கு பண்ணமாட்டேனா என்றார். அது அருமையான சைகை.

Tags:    

Similar News