சினிமா செய்திகள்

பிரபல 'பேட்மேன்' நடிகர் நிம்மோனியா நோயால் காலமானார்

Published On 2025-04-02 12:25 IST   |   Update On 2025-04-02 12:25:00 IST
  • 'பேட்மேன் ஃபாரெவர்' படத்தில் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்து வால் கில்மர் பெரும் புகழ் பெற்றார்.
  • டாம் குரூசின் டாப் கன் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் வால் கில்மர் நடித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் தனது 65 ஆவது வயதில் காலமானார்.

1984 ஆம் ஆண்டில் வெளியான உளவு திரைப்படமான 'டாப் சீக்ரெட்' மூலம் வால் கில்மர் ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் 'பேட்மேன் ஃபாரெவர்' படத்தில் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வால் கில்மர் பெரும் புகழ் பெற்றார். மேலும் டாம் குரூசின் டாப் கன் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் வால் கில்மர் நடித்துள்ளார்.

நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த வால் கில்மர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அவரது மகள் மெர்சிடிஸ் கில்மர் தெரிவித்தார்

கில்மருக்கு 2014 ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவர் சிகிச்சை பெற்று புற்றுநோயில் இருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News