சினிமா செய்திகள்

பசில் ஜோசப் நடித்த Maranamass படத்தின் முன்பதிவு ஆரம்பம்

Published On 2025-04-08 22:16 IST   |   Update On 2025-04-08 22:16:00 IST
  • மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பசில் ஜோசஃப்.
  • இப்படத்தை சிவபிரசாத் இயக்க கதையை சிஜு சன்னி எழுதியுள்ளார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பசில் ஜோசஃப். இவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது.

பசில் ஜோசஃப் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இவர் நடிப்பில் வெளியான ஜெய ஜெய ஜெய ஹே, ஜான்.ஈ மேன், ஃபலிமி, நுன்னாகுழி மற்றும் சமீபத்தில் வெளியான சூக்ஷ்மதர்ஷினி மற்றும் பொன்மேன் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்நிலையில்அடுத்ததாக பசில் மரண மாஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஒரு வித்தியாசமான ஃபன்கி கேர் ஸ்டைலுடன், வித்தியாசமான கதாப்பாத்திரம் மற்றும் தோற்றத்தில் காணப்படுகிறார். இதனால் படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இப்படத்தை சிவபிரசாத் இயக்க கதையை சிஜு சன்னி எழுதியுள்ளார்.டொவினோ தாமஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராஜேஷ் மாதவன், சிஜு சன்னி, புலியனம், சுரேஷ் கிருஷ்ணா, பாபு ஆண்டனி மற்றும் அனிஷ்மா அணில்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் காட்சிகளின் கலவையாக டிரெய்லர் உருவாகியுள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முன்பதிவுகள் தற்பொழுது தொடங்கியுள்ளது. ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் டிக்கெட் முன்பதிவுகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News