ஒன்ஸ் மோர் கேட்க வைக்கும் அர்ஜுன் தாஸ் - அதிதி படத்தின் 'மிஸ் ஒருத்தி' பாடல்
- அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் படம்
- மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடுக்கும் படம் ஒன்ஸ் மோர்.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இந்த படத்தின் மிஸ் ஒருத்தி பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
இவர் இதற்கு முன் ஹருதயம், இனி உதரம், சேஷம் மைக்-இல் ஃபாதிமா, குஷி, ஹை நானா போன்ற பல வெற்றிப் படங்களை இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்ஸ் மோர் திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.