சினிமா செய்திகள்

புற்று நோயால் போராடும் நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி - உதவி கேட்கும் குடும்பம்

Published On 2025-04-22 12:48 IST   |   Update On 2025-04-22 12:48:00 IST
  • தமிழ் சினிமாவில் குணசித்திர மற்றும் காமெடி ரோல்கள் ஏற்று நடிக்கும் நடிகர்களில் ஒருவர் சுப்பிரமணி.
  • தற்போது சூப்பர்குட் சுப்பிரமணி ராஜீவ் காந்தி அரது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 தமிழ் சினிமாவில் குணசித்திர மற்றும் காமெடி ரோல்கள் ஏற்று நடிக்கும் நடிகர்களில் ஒருவர் சுப்பிரமணி. திரையுலகில் அவரை பலரும் சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைப்பார்கள். அவர் பரியேறும் பெருமாள், காலா, பிசாசு என ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாளும் திறமை கொண்டவர்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியதால் இவரை அனைவரும் சூப்பர்குட் சுப்பிரமணி என அழைக்க தொடங்கினர்.

 

காலா, பரியேறும் பெருமாள், பிசாசு, ஜெய் பீம், வானம் கொட்டட்டும்,ஹீரோ, மகாமுனி, கூர்கா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக பரமன் திரைப்படம் வெளியானது.

 

இந்நிலையில் அவருக்கு புற்று நோய் என்பது தெரியவந்திருக்கிறது. தற்போது ராஜீவ் காந்தி அரது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இவர் நான்காம் கட்ட புற்று நோய் மற்றும் நிதி நெருக்கடியுடன் போராடி வருகிறார்.

பலரும் இந்த செய்தி தெரிந்து அதிர்ச்சியில் உள்ளனர். பல மக்கள் இவர்க்கு உதவுமாறு இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இவரது மனைவியான ராதா திரைத்துறையினருக்கும் அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

Similar News