சினிமா செய்திகள்

ஒன்ஸ்மோர் படத்தின் 2-வது சிங்கிள் 'இதயம்' ரிலீஸ்

Published On 2024-11-16 21:48 IST   |   Update On 2024-11-16 21:48:00 IST
  • அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ஒன்ஸ் மோர்.
  • ஒன்ஸ் மோர் திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ஒன்ஸ் மோர்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

ஒன்ஸ் மோர் திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.

மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ் சிங்கிள் "மிஸ் ஒருத்தி" பாடல் வெளியானது.

இந்நிலையில், ஒன்ஸ்மோர் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான "இதயம்" பாடல் வெளியானது.

Tags:    

Similar News