சினிமா செய்திகள்
லெஜெண்ட் சரவணன்

இந்த முறை நான் அடிக்குற அடி மரண அடி.. வைரலாகும் “தி லெஜண்ட்” டிரைலர்

Published On 2022-05-30 11:38 IST   |   Update On 2022-05-30 11:38:00 IST
சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர்களை வைத்து விளம்பரங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் சரவணா ஸ்டோர்ஸ் தொடர்பான விளம்பரங்களில் லெஜண்ட் சரவணன் தானே நடித்து பிரபலமானார். இவர் தன்னுடைய தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் முதல் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் லெஜண்ட் சரவணன் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை அஜித்தை வைத்து 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி மற்றும் ஜெரி என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு “தி லெஜண்ட்” என பெயரிடப்பட்டுள்ளது. 


லெஜெண்ட் சரவணன்

இதில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா, பிரபு, யோகிபாபு, நாசர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது, சமீபத்தில் வெளியான இதன் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்து வைரலானது. இந்நிலையில் “தி லெஜண்ட்” படத்தின் டிரைலர்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த முறை நான் அடிக்குற அடி மரண அடி என்ற வசனங்கள் இடம் பெற்றுள்ள இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.


Tags:    

Similar News