சினிமா
அம்மு அபிராமி

காட்டுவாசி பெண்ணாக அம்மு அபிராமி

Published On 2019-08-26 16:24 IST   |   Update On 2019-08-26 16:24:00 IST
ராட்சசன், துப்பாக்கி முனை படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த அம்மு அபிராமி, அடுத்ததாக காட்டுவாசி பெண்ணாக நடித்து வருகிறார்.
ராட்சசன், துப்பாக்கி முனை படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் அம்மு அபிராமி. அடுத்து தனுசுடன் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இவர் அடுத்து வினோத் கி‌ஷன் ஜோடியாக அடவி என்ற படத்தில் நடித்துள்ளார்.

வினோத் கி‌ஷன் நான் மகான் அல்ல படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர். திருடா திருடி, ஆழ்வார், கிங் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரமேஷ்.ஜி எழுதி இயக்குகிறார். ஸ்ரீகிருஷ் பிக்சர்ஸ் சார்பாக சாம்பசிவம் தயாரிக்கிறார். படம் பற்றி ரமேஷ்.ஜி கூறியதாவது:-



‘இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலைப்பகுதியில் ரிசார்ட் கட்டுவதற்காக அங்கு வாழும் மக்களை விரட்ட ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. அந்த காட்டுவாசி கிராமத்தை சேர்ந்த வினோத்தும் அம்மு அபிராமியும் மக்களை ஒன்று சேர்த்து அந்த கும்பலிடம் போராடுகிறார்கள். அவர்களது போராட்டம் வென்றதா? என்பதே கதை. சப்வே என்ற மலைவாழ் மக்களின் தெய்வத்தை படத்தின் திருப்புமுனைக்கு பயன்படுத்தியுள்ளோம். சரத் ஜடா இசையமைத்துள்ளார்’. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News