சினிமா

ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய சௌந்தரராஜா

Published On 2019-05-22 12:33 GMT   |   Update On 2019-05-24 07:22 GMT
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்த சௌந்தரராஜா, தற்போது ஆக்‌ஷன் ஹீரோவாக மாறியிருக்கிறார்.
சுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில் வில்லனாக அறிமுகமாகி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் மற்றும் சமீபத்தில் வெளியான வெற்றி படம் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராகவும், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, ஒரு கனவு போல படங்களில் ஹீரோவாகவும் தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சௌந்தரராஜா முதன் முறையாக முழுநீள ஆக்சனில் களம் இறங்கியிருக்கிறார்.

காபி என்னும் திரைப்படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் சௌந்தரராஜா, சண்டை காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார். ஓம் சினி வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக சாரதி மற்றும் சதீஷ் இத்திரைப்படத்தை அதிகபொருள் செலவில் தயாரிக்கின்றனர்.



மேலும் நடிகர் சௌந்தரராஜா ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்திலும், விஜயுடன் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Tags:    

Similar News