சினிமா

படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா

Published On 2018-12-23 11:22 IST   |   Update On 2018-12-23 11:22:00 IST
நடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் ‘யோகி டா’ படப்பிடிப்பில் நடித்த போது இடது கண்ணுக்கு கீழே அடிப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். #Dhansika #Yogida
நடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’. இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இந்த படத்தை இயக்குகிறார். சாய் தன்ஷிகாவுடன் இந்த படத்தில் கபீர் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் தன்ஷிகாவுக்கு சில ஆக்‌ஷன் காட்சிகளும் உள்ளன. சிறுத்தை கணேஷ் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. நைட் கிளப் ஒன்றில் ரவுடிகளுடன் தன்ஷிகா சண்டையிடும் காட்சியை படக்குழுவினர் படமாக்கிக் கொண்டிருந்த போது நடிகை தன்ஷிகா டூப் போடாமல் ஒரிஜினலாக நடித்துள்ளார். 



அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த செட்டில் தன்ஷிகா நடிக்கும் காட்சி ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது. பின்னர் படப்பிடிப்பு நடந்த போது டைமிங் மிஸ் ஆனதால் தன்ஷிகாவின் இடது கண்ணுக்கு கீழே பீர் பாட்டில் குத்தியது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு படக்குழுவினர் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
Tags:    

Similar News