சினிமா

திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்

Published On 2018-11-19 17:30 IST   |   Update On 2018-11-19 17:30:00 IST
சினிமாவில் இருந்து விலகி, சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நமீதா, ஸ்ரீமகேஷ் இயக்கத்தில் ரீஎன்ட்ரி கொடுக்கும் `அகம்பாவம்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. #Agampavam #Namitha
ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படம் `அகம்பாவம்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார். 
திருமணத்திற்குப் பிறகு நமீதா நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்காக 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்துள்ளார்.

ஸ்ரீமகேஷ் இயக்கும் இந்த படத்தில் படத்தின் தயாரிப்பாளரான வாராகி, கொடூரமான வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன், மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். கோலிசோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.



ஜெகதீஷ் வி.விஸ்வம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சின்னு சதீஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

ஸ்ரீமகேஷ் இதற்கு முன்பாக சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பரபரப்பான சமூக போராட்டம் கொண்ட விதையாக உருவாக இருக்கிறது அகம்பாவம். 

பெண் போராளிக்கும், ஜாதியை வைத்து  அரசியல் பண்ணும் ஒரு மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் படத்தின் கதை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. 



இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பண்ருட்டி, தேனி, கல்வராயன் மலை, சேலம் ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது. #Agampavam #Namitha

Tags:    

Similar News