சினிமா

இந்தியில் பிர்சா முண்டாவின் வாழ்க்கை படத்தை உருவாக்கும் பா.இரஞ்சித்

Published On 2018-11-15 06:41 GMT   |   Update On 2018-11-15 06:41 GMT
கபாலி, காலா படங்களை தொடர்ந்து பா.இரஞ்சித் அடுத்ததாக சுதந்திர போராட்ட தியாகி பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தியில் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். #PaRanjith #BirsaMunda
கபாலி, காலா படத்திற்கு பிறகு பா.இரஞ்சித் தனது தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தார். இந்த நிலையில், அவர் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

அந்த படம் இந்திய சுதந்திர போராட்டத் தியாகியும், பழங்குடியின மக்களின் சுதந்திரதத்திற்கு போராடிய பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. பியாண்ட் தி கிளெவ்ட்ஸ் படத்தை தயாரித்த நமா பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.



படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித் தனது குழுவினருடன் பீகார், ஜார்க்கண்ட் பகுதியில் பிர்சா முண்டா பற்றிய, மக்களின் கருத்துக்களை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. 

அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படமும் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #PaRanjith #BirsaMunda

Tags:    

Similar News