சினிமா
வில்லனாக களமிறங்கும் ஜித்தன் ரமேஷ்
ஜித்தன், மதுரைவீரன், புலி வருது, நீ வேணும்டா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த ஜித்தன் ரமேஷ் தற்போது வில்லனாக ஒரு படத்தில் நடிக்கிறார். #JithanRamesh
ஜித்தன், மதுரைவீரன், புலி வருது, நீ வேணும்டா செல்லம் உட்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் ஜித்தன் ரமேஷ். நீண்ட நாட்கள் படங்களில் நடிக்காமல் பட தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்த அவர் மீண்டும் நடிக்க வருகிறார். ஆனால், கதாநாயகனாக இல்லாமல் பக்கா வில்லனாக நடிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சாய் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வங்காளத்தை சேர்ந்த ஈனா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் இன்னும் முடிவாக வில்லை. இன்று சென்னையில் தி பார்க் ஹோட்டலில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது.
ஜித்தன் ரமேஷுடன் ஏராளமான அழகிகள் ஆடிப்பாடுவது மாதிரியான பாடலை நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது. ஆனந்த் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி ஒளிப்பதிவு செய்கிறார். வம்சி கிருஷ்ணா மல்லா என்பவர் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
வேகமாக வளர உள்ள இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு முழுவதும் கோவாவில் நடக்க உள்ளது. வில்லனாக நடிக்கும் ஜித்தன் ரமேஷ் கூறும்போது, ‘படம் திரைக்கு வந்தவுடன் இந்த கேள்வி வராது சில மாதங்கள் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன் இயக்குனர் கேரக்டரை சொன்னவுடன் இந்த காரக்டரை விடக் கூடாது என்று முடிவெடுத்து ஓ.கே சொன்னேன்.