சினிமா

சோனம் கபூர் அணிந்துள்ள மோதிரத்தின் விலை இவ்வளவா?

Published On 2018-05-18 11:04 IST   |   Update On 2018-05-18 11:04:00 IST
சமீபத்தில் தொழில் அதிபர் குடும்பத்தை சேர்ந்த ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்துக் கொண்ட சோனம் கபூர் அணிந்திருக்கும் மோதிரத்தின் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
சோனம்கபூர் சமீபத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர் குடும்பத்தை சேர்ந்த ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்து கொண்டார். விரைவில் கணவருக்கு சொந்தமான டெல்லியில் 3 ஆயிரத்து 170 சதுர அடியில் அமைந்துள்ள ஆடம்பர பங்களாவில் குடியேறப்போகிறார். 

இந்த வீட்டின் மதிப்பு ரூ.173 கோடி என்கின்றனர். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடைய வீட்டின் மதிப்பு ரூ.160 கோடிதான். தொழில் அதிபரை மணந்துள்ள இன்னொரு நடிகையான ஷில்பா ஷெட்டி ரூ.100 கோடி மதிப்புள்ள வீட்டிலும், கங்கனா ரணாவத் ரூ.30 கோடி மதிப்பு கொண்ட வீட்டிலும் வசிக்கின்றனர். சோனம்கபூர் பிரபல நடிகர் அனில்கபூரின் மகள். 

இந்த நிலையில் கூடுதல் தகவலாக சோனம் கபூர் ரூ.90 லட்சம் மதிப்புள்ள மோதிரம் அணிந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை கேட்டு பிற இந்தி நடிகைகள் பொறாமையால் வாய்பிளந்து நிற்கின்றனர். இரு வாரங்களுக்கு முன்புதான் சோனம் கபூருக்கு திருமணம் நடந்தது. அப்போது கணவர் ஆனந்த் அஹுஜா இந்த விலை உயர்ந்த மோதிரத்தை அவரது கைவிரலில் அணிவித்தார் என்கின்றனர்.
Tags:    

Similar News