ஆன்மிக களஞ்சியம்

திருவெண்காடு தலவிருட்சங்கள்

Published On 2023-12-23 12:05 GMT   |   Update On 2023-12-23 12:05 GMT
  • வடவால், கொன்றை, வில்வம் ஆகிய இங்கு தலவிருட்சங்கள்.
  • ருத்ர பாதங்களின் பக்கத்தில் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.

வடவால், கொன்றை, வில்வம் ஆகிய இங்கு தலவிருட்சங்கள்.

கயிலாயநதன் கல்லால நிழலில் அமர்ந்திருப்பான்.

சிவபெருமானுக்கு எத்தனையோ தல விருட்சங்கள் இருப்பினும் ஆலமரமே அவனுக்கு மிகவும் ஏற்புடையது என்பதை ஆலமர் செல்வன் என்னும் அவனுடைய பெயரே காட்டும்.

சிவன் என்னும் பெயரே காணப்படாத சங்க இலக்கியத்தில் ஆலமர் செல்வன் என்னும் பெயர் பயின்று வருகின்றது.

அத்தகைய அலமரமே இங்குத் தலவிருட்சமாக இருப்பதும் அந்த ஆலமரத்தடியில் சிவபெருமான் வீற்றிருந்தான் எனப் புராணம் சொல்வதும் இவ்வூரின் தொன்மையையும் சிறப்பையும் காட்டும்.

கயாவில் உள்ளது போன்றே இதுவும் அக்ஷய வடமெனும் அழியாத ஆலமரம்.

கயையில் விஷ்ணுபாதம் உள்ளது.

இங்குள்ள ஆலமரத்தடியில் ருத்ரபாதம் உள்ளது.

ருத்ர பாதங்களின் பக்கத்தில் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.

பிதிர்க்கடன் செய்ய இது மிகவும் உத்தமமான இடம்.

சிவபெருமானுக்கு உகந்த மலர்களில் கொன்றை மலர் முதலிடம் பெறுவது. கொன்றை வேணியனாகி சிவனுக்கு கொன்றெயே இங்குத் தலவிருட்சமாக உள்ளது.

வில்வமில்லாத சிவன்கோவில் உண்டா? வில்வ பத்திரமில்லாத சிவபூஜைதான் உண்டா? இங்கு விவ மரமும் தலவிருட்சம், அதனடியில் பிரம்ம சமாதி உள்ளது.

Tags:    

Similar News