ஆன்மிக களஞ்சியம்

திருமூலர் சில குறிப்புகள்

Published On 2024-02-23 19:09 IST   |   Update On 2024-02-23 19:09:00 IST
  • திருமூலர் புரட்டாசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர் என போகரின் சப்த காண்டத்தில் குறிப்புள்ளது.
  • அங்குள்ள ஆதிமூலர் சந்நிதியே அவர் ‘ஒளி ஐக்கியம்‘ ஆன ஜீவ பீடம்!

திருமூலர் புரட்டாசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர் என போகரின் சப்த காண்டத்தில் குறிப்புள்ளது.

இவர் நந்தீஸ்வரரிடம் உபதேசம் பெற்றதும் முக்தி எய்தியதும் மூலநட்சத்திரம் எனவும் இந்நூல் குறிக்கின்றது.

சில சித்தர் பாடல்களில் இவர் வேளாளர் மரபு என்னும் குறிப்பு உள்ளது. சில பாடல்கள் ஆயர்குலத்தவர் எனக் குறிக்கின்றன.

ஓர் இளவயது அரசன் அகால மரணம் அடைவதால், அவன் மனைவியும் சுற்றத்தாரும் அழுது புலம்ப, திருமூலர் தன் உயிரை இறந்த அரசனின் உடலில் புகுத்தி எழுந்தார் என 'வைத்திய ரத்தினச் சுருக்கம்' என்னும் சித்தர் நூலில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது.

மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை தமிழுக்கும், சைவத்துக்கும், சித்தர் உலகுக்கும் முச்சிறப்பாய் அளித்த திருமூலர், ஜீவ ஐக்கியம் பெற்ற ஸ்தலம் சிதம்பரம்.

அங்குள்ள ஆதிமூலர் சந்நிதியே அவர் 'ஒளி ஐக்கியம்' ஆன ஜீவ பீடம்!

Tags:    

Similar News