ஆன்மிக களஞ்சியம்

திருமந்திரத்தில் விநாயகர் வணக்கப் பாடல்

Published On 2024-02-23 13:31 GMT   |   Update On 2024-02-23 13:31 GMT
  • பழைய கணபதியின் தொப்பை இல்லாத திருஉருவம் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும்
  • மற்றொன்று இங்கிலாந்தில் இருக்கும் அருங்காட்சியகத்திலும் இன்றும் இருப்பதைக் காணலாம்.

திருமந்திரத்தில் "ஐந்து கரத்தினை" என்று தொடங்கும் விநாயகர் வணக்கப் பாடல், தற்காலத்தில் தான் திருமூலரின் திருமந்திரம் நூலில் சேர்க்கப்பட்டது.

அவர் காலத்தில் சைவ சமயத்தில், சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்தவொரு காரியங்களையும், இலக்கியங்களையும், அல்லது நூல்களையும் தொடங்கியது இல்லை.

விநாயகரின் வழிபாடு பிற்காலத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான, சிறுத்தொண்டர் என்று போற்றப்படுகிற பரஞ்சோசியத்திலே அவர்கள் வணங்கும் தெய்வமாகிய கணபதியைத் தமிழகத்துக்கு தான் திரும்பும்பொழுது கொண்டு வந்தார் என்பதும், அப்பொழுது விநாயகரின் வயிற்றுப் பகுதி இன்று இருப்பது போல தொந்தியாக இல்லாமல் தட்டையாக இருந்தது என்பதும் வரலாறு.

இந்த வரலாற்றுக்கு சான்றாக, பழைய கணபதியின் தொப்பை இல்லாத திருஉருவம் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும், மற்றொன்று இங்கிலாந்தில் இருக்கும் அருங்காட்சியகத்திலும் இன்றும் இருப்பதைக் காணலாம்.

Tags:    

Similar News