- பாம்பின் பெயர்கள் கொண்ட இறைவனது பெயர்கள் பல உள்ளன.
- அதே போல் நாகத்தின் பெயர் கொண்ட தலங்கள் பல உள்ளன.
தமிழ்நாட்டிலும் நாக வழிபாடு புகழ் பெற்றது.
பாம்பின் பெயர்கள் கொண்ட இறைவனது பெயர்கள் பல உள்ளன.
நாக ஆபரண விநாயகர், சர்ப்பபுரி ஈசுவரர், நாகநாதர், நாகேசுவரர், புற்றீசர், வன்மீக நாதர்
போன்ற பெயர்கள் இறைவனுக்கு வழங்கப்படுகின்றன.
அதே போல் நாகத்தின் பெயர் கொண்ட தலங்கள் பல உள்ளன.
நாகர்கோவில், நாகபட்டினம், நாகமலை, ஆலவாய், கோடநல்லூர், திருப்பாம்புரம்,
பாம்பணி, காலத்தி போன்ற பெயர்கள் பாம்பின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டவை.
பாம்பின் பெயர்களோடு பொருந்தி இருக்குமாறு பெயர் வைக்கும் பழக்கமும் தமிழ் மக்களிடம் உள்ளது.
நாகராஜன், நாகப்பன், நாகமணி, நாகரத்தினம், நாகபூஷணம், நாகார்ஜுனன், நாகநாதன்,
நாகலட்சுமி, நாகம்மை, நாகலிங்கம், நாககுமாரி, நாகநந்தினி போன்ற பெயர்கள் குறிப்பிடத்தக்கவை.
கருவுற்ற பெண் நாகம் ஒன்றைப் பார்த்து விட்டால் அவள் பெற்றெடுத்த குழந்தைக்கு நாகத்தின் பெயரோடு பொருந்தி வருமாறு பெயர் வைப்பது நாட்டுப்புற வழக்கமாகும்.