ஆன்மிக களஞ்சியம்

செல்வம் தரும் திருவாவடுதுறை சிவாலயம்

Published On 2024-02-23 12:54 GMT   |   Update On 2024-02-23 12:54 GMT
  • கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் திருவாவடுதுறை அமைந்துள்ளது.
  • 5 நிலை கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது.

கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் திருவாவடுதுறை அமைந்துள்ளது.

இந்த ஊருக்கு நவகோடி சித்தர்புரம் என்ற ஒரு பெயரும் உண்டு ஒன்பது சித்தர்கள் இவ்விடத்தில் ஒன்பது திசையில் வாழ்ந்ததால் இப்பெயர் வரலாயிற்று.

சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறையும் உலகப்புகழ் பெற்றதுமான திருமந்திரத்தை திருமூலர் இயற்றிய தலம் இது.

அவர் இத்தலத்தில்தான் சமாதி நிலை உற்றார்.

இத்தலத்தில் நாம் செல்ல வேண்டியது கோமுக்தீஸ்வரர் ஆலயம்.

மூலவர்: மாசிலாமணி ஈஸ்வரர் , கோமுக்தீஸ்வரர் அம்பாள்: அதுலகுச நாயகி, ஒப்பிலா முலையம்மை

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

5 நிலை கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது.

கோபுர வாயிலுக்கு எதிரில் கோமுக்தி தீர்த்தம் உள்ளது.

கோபுர வாயிலின் இருபுறமும் பசுவான உமைக்குத் துணையாக வந்த விநாயகர், முருகன் சந்நதிகள் உள்ளன.

கோபுர வாயிலைக் கடந்தால் உள்ள மண்டபத்தில் பெரிய நந்தியுள்ளது.

இந்த நந்திக்குப் பின்னால் உள்ள பலிபீடமே ஞானசம்பந்தருக்குப் பொற்கிழி வைத்தருளிய இடமாகும்.

திருஞானசம்பந்தர் இப்பீடத்தின் அருகில் தமிழ்மணம் கமழ்வதை அறிந்து பீடத்தின் கற்களை பெயர்க்க அதன் அடியில் இருந்து திருமூலர் பாடிய திருமந்திரம் வெளிப்பட்டது.

பெரிய நந்திக்கு முன்புறம் மற்றொரு சிறிய நந்தியும் இருக்கிறது.

பிரதோஷ வேளையில் இவருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

திரு விடைமருதூர் தலத்திற்கான பரிவாரத் தலங்களில் இத்தலம் நந்தி தலமாக இருப்பதால் இங்கு நந்தியிடம் வேண்டிக் கொள்வது விசேஷம்.

சுவாமி சன்னதிக்கு வலப்புறத்தில் தியா கேசர் சந்நிதி உள்ளது.

பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சந்நிதியில் இத்தலத்தின் உற்சவ மூர்த்தியான அணைத் தெழுந்த நாயகர் இருக்கிறார்.

இவர் அம்பாளை அணைத்த கோலத்தில் இருந்தாலும், அம்பாள் மீது கைகள் படாதவாறு சிலை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம்.

இவர் இங்கு வரப்பிரசாதியாக திகழ்கிறார். பிரிந்திருக்கும் தம்பதியர் இவரிடம் வேண்டிக்கொண்டால் மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.

Tags:    

Similar News