ஆன்மிக களஞ்சியம்

நாகவழிபாடு தோற்றம்

Published On 2023-11-16 16:02 IST   |   Update On 2023-11-16 16:02:00 IST
  • நல்ல பாம்பு சிவனின் கழுத்தை அலங்கரிப்பதாகக் கருதி மக்கள் வழிபட்டனர்.
  • நாக வழிபாடு வேறு பல நாடுகளிலும் இருந்து வந்துள்ளது.

முதலில் இயற்கை வழிபாட்டை அறிந்த மனிதன் பின்னர் தனக்கு நல்வாழ்வு தரும் சக்திகளை

பல்வேறு உருவங்களில் கண்டு அவற்றிற்குக் கோவில் எழுப்பி வழிபட்டான்.

இது தொடர்பான சம்பவங்கள் தான் புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் மலர்ந்தன.

இவற்றின் அடிப்படையிலேயே பாம்பு கோவில்கள் தோன்றின.

நல்ல பாம்பு சிவனின் கழுத்தை அலங்கரிப்பதாகக் கருதி மக்கள் வழிபட்டனர்.

நாகதோஷம் இருந்தால் குழந்தை பிறக்காது என்று நம்பினர்.

இன்றும் புற்றுக்குப் பால் வார்த்து வழிபடும் வழக்கம் உள்ளது.

முதலில் பயம் காரணமாக நாகங்களை வழிபட்டவர்கள் பின்னர் அது ஏதோ ஒரு தெய்வ சக்திக்குக் கட்டுப்பாடு நடப்பதாகவும்,

விதி முடிந்தவரை மட்டுமே அது கடிப்பதாகவும், நம்பினார்கள்.

நாளடைவில் அனைத்து விலங்கு வழிபாட்டு முறைகளிலும் பாம்பு வழிபாட்டிற்கு எனத் தனி முக்கியத்துவம் ஏற்பட்டது.

அன்று முதல் இன்று வரை நாக வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நாக வழிபாடு வேறு பல நாடுகளிலும் இருந்து வந்துள்ளது.

பொனீசியா, மெஸபடோமியா, கிரேக்கம், இத்தாலி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, எகிப்து, நேபாளம் ஆகிய நாடுகளிலும் நாக வழிபாடு இருந்து வருகிறது.

Tags:    

Similar News