தோஷ பரிகாரங்கள்

வாஸ்து: படிக்கும் அறை அமைப்பது எப்படி?

Published On 2023-02-27 01:27 GMT   |   Update On 2023-02-27 01:27 GMT
  • வாழ்க்கை முழுவதுமே கற்றல் நடந்து கொண்டே இருக்கிறது.
  • வீட்டில் படிக்கும் வரை என்று ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும்.

வீட்டுமனை வாங்கி புதிய வீடு கட்டுபவர்களுக்கு வீட்டில் படிக்கும் அறைகளை யார் யாருக்கு எங்கே? கட்டலாம் என்று கேள்வி எழும். முதலில் வீட்டில் படிக்கும் வரை என்று ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும். சொந்த வீடாக நீங்கள் கட்டும்போது இதை முதலில் கவனியுங்கள்.

வாழ்க்கை முழுவதுமே கற்றல் நடந்து கொண்டே இருக்கிறது. படிக்கும் அறையின் அளவு உங்கள் தேவைக்கேற்ப வைத்துக் கொள்ளலாம்.

படிக்கும் அறை வடக்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். படிக்கும் குழந்தைகளோ பெரியவர்களோ கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து படிக்கும்படி இருப்பது நலம்.

தென்மேற்கு அதாவது குபேர மூலையில் அமைந்துள்ள படுக்கையறையில் பெரியவர்கள் குடும்பத் தலைவன் தலைவி அறையாக இருப்பது நலம். திருமணமான இளம் தம்பதியினர்களுக்கும் தென்மேற்கு படுக்கையறை சிறப்பை சேர்க்கும்.

வீட்டில் உள்ள வயதானவர்களும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குமான அறையை வடகிழக்கு திசையில் அமைக்கலாம். வீட்டில் விருந்தினர்கள் வரும்போது அவர்களை தங்க வைக்க வடமேற்கு திசையில் விருந்தினர் அறை அமைக்கலாம்.

Tags:    

Similar News