தோஷ பரிகாரங்கள்

விலங்குகளும்... பயணச் சகுனங்களும்...

Published On 2022-07-24 07:54 GMT   |   Update On 2022-07-24 07:54 GMT
  • பசுவின் பின்புறத்தை தொட்டு வணங்கி விட்டுச் செல்வது நல்லது.
  • எந்த விலங்கு எதிரில் வந்தால் நல்ல சகுனம் என்று அறிந்து கொள்ளலாம்.

நாம் வெளியில் புறப்படும் பொழுது, பசு நமக்கு எதிரில் வந்தால் நல்ல சகுனமாகும். பசுவின் பின்புறத்தை தொட்டு வணங்கி விட்டுச் செல்வது நல்லது.

ஒரு காரியத்திற்கு புறப்படும் பொழுது குதிரையைப் பார்த்தாலும், குதிரை எதிரில் வந்தாலும் மிக மிக நல்ல சகுனமாகும். செய்யப்போகும் காரியம் மிக எளிதில் நிறைவேறும்.

பயணத்தின் போது நாய் நமக்கு முன்னால் ஓடினால் பைரவரின் ஆசி உண்டு. பயணத்தால் நன்மை கிடைக்கும்.

மூஞ்சூறு எதிரில் வந்தால் விநாயகரின் ஆசி நமக்கு கிடைக்கும். முழுமையாக காரியம் வெற்றி பெறும்.

Tags:    

Similar News