சினிமா செய்திகள்

விக்ரம்

நான் கொஞ்சம் லேட் தான்.. வைரலாகும் நடிகர் விக்ரம் வீடியோ..

Update: 2022-08-13 05:28 GMT
  • அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'.
  • இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கோப்ரா'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


விக்ரம்

மேலும், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள "பொன்னியின் செல்வன்" திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து, இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் "சியான் 61" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், நடிகர் விக்ரம் சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். மேலும், இவர் இணைந்த ஒரு சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் பலர் இவரை பின் தொடர ஆரம்பித்து விட்டனர். அதுமட்டுமல்லாமல் இவர் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Tags:    

Similar News