சினிமா செய்திகள்

ஜமுனா

பழம்பெரும் நடிகை ஜமுனா உடல்நலக் குறைவால் காலமானார்

Published On 2023-01-27 12:26 IST   |   Update On 2023-01-27 12:26:00 IST
  • தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா உடல் நலக்குறைவால் காலமானார்.
  • இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஜமுனா. சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாகவும், தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் நடிகர் கமலுக்கு தாயாகவும் நடித்துள்ளார்.


ஜமுனா

மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்த ஜமுனா, தங்கமலை ரகசியம் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவருக்கு 1999ல் தமிழக அரசின் எம்ஜிஆர் விருது வழங்கப்பட்டது. நடிகை ஜமுனா 1980ம் ஆண்டு தேர்தலில் ஆந்திராவின் ராஜமுந்திரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானவர். பின் 1990களில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் 86 வயதாகும் நடிகை ஜமுனா உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவு, தெலுங்கு திரையுலகிற்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News