சினிமா செய்திகள்

நாங்களும் விஜயகாந்த் போலதான்- சூரகன் நடிகர் பேச்சு

Published On 2023-11-22 16:01 IST   |   Update On 2023-11-22 16:01:00 IST
  • சதீஷ் ஜி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "சூரகன்".
  • இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் ஜி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "சூரகன்". தேர்ட் ஐ சினி கிரியேஷன் சார்பாக வி.கார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்திற்கு அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சுபிக்ஷா நடித்துள்ளார். இப்படத்தில் பாண்டியராஜன், வின்சண்ட் அசோகன், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரேஷ்மா பசுபுலெடி, வினோதினி, சுரேஷ் மேனன், கே.ஜி.எஸ். வெங்கடேஷ், சாய் தீனா, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


சதீஷ் ஜி குமார் ஒளிப்பதிவு இயக்கம் செய்துள்ள இப்படத்தில் இணைந்து ஜேசன் வில்லயம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் நடிகர்  கார்த்திகேயன் பேசியதாவது, இந்த படத்தில் வேலை பார்த்த அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தனர். அசோகன் சார் சொன்னது போல் மனதளவிலும் நாங்கள் அனைவருமே விஜயகாந்த் சார் போல் தான் கடினமாக உழைத்தோம். இந்த படத்தில் எல்லோருமே அவர்கள் படம் போல் நினைத்து வேலை பார்த்தார்கள். டேஞ்சர் மணி சார் எல்லாம், என்னைப் புதுமுகமாக நினைக்காமல், எனக்காக நிறைய மெனக்கெட்டு உழைத்தார்.


பணம் மட்டும் எல்லாவற்றையும் செய்துவிடாது, அன்பும் உழைப்பும் நம்பிக்கையும் தான் ஒரு விஷயத்தை உருவாக்கும். அது எங்கள் டீமிடம் இருந்தது. அச்சு ராஜாமணி அருமையான இசையை தந்துள்ளார். தியேட்டரில் கண்டிப்பாக இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். டிசம்பர் 1 திரையரங்குகளில் இப்படம் வருகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. இங்கு வந்து எங்களை வாழ்த்திய எங்கள் டீமுக்கு ஆதரவாக இருந்த தனஞ்செயன் சாருக்கு நன்றி என்று பேசினார்.

Tags:    

Similar News