சினிமா செய்திகள்
null

கோவாவில் பிறந்தநாள் கொண்டாடிய சாக்ஷி அகர்வால்

Published On 2023-07-20 17:58 IST   |   Update On 2023-07-20 17:59:00 IST
  • பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் சாக்ஷி அகர்வால்.
  • சாக்ஷி அகர்வாலின் பிறந்தநாளான இன்று அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் ரஜினிகாந்தின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சாக்ஷி அகர்வால் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார். தற்போது பல படங்களை சாக்ஷி அகர்வால் கைவசம் வைத்திருக்கிறார்.



சாக்ஷி அகர்வாலின் பிறந்தநாளான இன்று அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை கோவாவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News