சினிமா செய்திகள்

குடும்பத்துடன் ஒ.என் ரத்தினம்

செவ்வந்தி சீரியல் இயக்குனர் மனைவி எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் உறவினர்கள்

Published On 2023-05-26 17:12 IST   |   Update On 2023-05-26 17:12:00 IST
  • வாணி ராணி, பிரியமான தோழி போன்ற தொலைக்காட்சி தொடரை இயக்கியவர் ஒ.என் ரத்தினம்.
  • இவர் பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வாணி ராணி, பாண்டவர் இல்லம், பிரியமான தோழி போன்ற தொலைக்காட்சி தொடரை எடுத்து முன்னணி சீரியல் இயக்குனர் பட்டியலில் இருப்பவர் இயக்குனர் ஒ.என் ரத்தினம். இவர் தற்போது செவ்வந்தி என்ற தொடரை இயக்கி வருகிறார். இவர் சென்னை, வளசரவாக்கம், அன்பு நகர் இரண்டாவது தெருவில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

பள்ளி விடுமுறை என்பதால் பிள்ளைகள் இருவரையும் தாத்தா வீட்டுக்கு பொள்ளாச்சிக்கு அனுப்பியிருக்கின்றனர். ரத்னமும் அவரது மனைவியும் மட்டுமே வீட்டில் இருந்த நிலையில் கணவன் மனைவி இடையில் வாக்குவாதம் நடந்ததாகத் கூறப்படுகிறது. தாத்தா வீட்டில் இருந்து சென்னைக்கு திரும்பிய மகன்களை அழைத்து வர ரத்னம் பேருந்து நிலையத்துக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பிரியா தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து பிரியாவின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஒ.என் ரத்தினம் மற்றும் பிரியா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News