சினிமா செய்திகள்

தொலைந்து போயிருக்கலாம் ஆறுதலாவது உண்டு.. இயக்குனர் சீனு ராமசாமி உருக்கம்

Published On 2023-06-04 08:36 GMT   |   Update On 2023-06-04 08:36 GMT
  • ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே மூன்று ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
  • இந்த விபத்து குறித்து இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 


இந்த விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்டு தமிழக அரசு சிறப்பு ரயில் மூலம் தமிழகம் கொண்டு வந்தது. இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி பதிவிட்டிருப்பது,

தொலைந்து போயிருக்கலாம்

ஆறுதலாவது உண்டு,

தென்னங்கீற்று பந்தல் சிந்தும் ஒளியென நம்பிக்கையிருக்கும்

திரும்ப வரலாம்மென்ற நினைப்பு,

நினைப்பே உயிர் ஜோதி வளர்க்கும்.


சீனு ராமசாமி

வாழ

போனவர்கள்

திரும்ப வருகையில் நிகழும்

பயணங்கள் மீதான

காலத்தின் விபரீதப் போர்

கோர விபத்துகள்,

விபத்துக்கு பின்னிருக்கும்

ஒரு கவனமின்மை

அக்கவனமின்மைக்கு பின்னே நான் போகவில்லை,

இறப்பின்

அஞ்சலி செலுத்தும் நேரமிது.

பிழைத்தவர்கள்

மறுபடி

பிழைக்கச்

செய்யும்

தருணமிது

தப்பியவர்கள்

இல்லம் வரும்

மாலையிது.

சுற்றி வந்து

கைகொடுத்த கிராமத்து மனிதத்தை

வாழ்த்தும் நிமிடமிது என்று சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News