சினிமா செய்திகள்

பா. ரஞ்சித்

கதாபாத்திரங்களை அறிமுகம் செய்த பா. ரஞ்சித்.. கவனம் ஈர்க்கும் வீடியோ..

Published On 2022-07-13 15:26 GMT   |   Update On 2022-07-13 15:26 GMT
  • முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது.
  • இப்படம் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது.

முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இப்படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது. 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இரண்டாம் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார்.


நட்சத்திரம் நகர்கிறது

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வித்தியாசமான முறையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Full View


Tags:    

Similar News