சினிமா செய்திகள்

பா. ரஞ்சித்

பா. ரஞ்சித் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்

Update: 2022-08-17 08:46 GMT
  • முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது.
  • இப்படம் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது.

முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இப்படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது. 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


நட்சத்திரம் நகர்கிறது

மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இரண்டாம் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார்.


நட்சத்திரம் நகர்கிறது

'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படம் சென்சார் சான்றிதழுக்காக சென்றுள்ளது. படத்தில் குறிப்பிட்ட சாதி பற்றிய காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் இதனால், சென்சார் அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவித்து சென்சார் சான்றிதழ் தர மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

Similar News