சினிமா செய்திகள்

அவினாஷ்

விபத்தில் சிக்கிய கேஜிஎப் பட நடிகர்

Update: 2022-07-01 08:15 GMT
  • இயக்குனர் நீல் பிரசாத் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான திரைப்படம் கேஜிஎப்.
  • இந்த படத்தில் நடிகர் அவினாஷ் கேங்க்ஸ்டராக நடித்துள்ளார்.

இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் கதாநாயகனாக நடித்து இரண்டு பாகங்களாக வெளியாகிய திரைப்படம் கேஜிஎப். பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகிய இந்தபடம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் நடிகர் அவினாஷ் கேங்க்ஸ்டராக நடித்துள்ளார். இவர் பெங்களூரில் தனது பென்ஸ் காரில் ஜிம்மிற்கு சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.


அவினாஷ் - யஷ்

இந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பித்துள்ள நடிகர் அவினாஷ் இது குறித்த பதிவு ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "நான் ஜிம்மை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது ​​​​அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகே சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது. ஆனால் காலியான சாலையில் சிவப்பு சிக்னலைத் தாண்டி வேகமாக வந்த ஒரு கண்டெய்னர் என் கார் மீது மோதியது. அதன் தாக்கம் என் கார் பானட் கிழியும் அளவுக்கு இருந்தது. விபத்தில் எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, காருக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டது" என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News