சினிமா செய்திகள்

நடிகர் விஜய் பாபு

null

நடிகை பாலியல் பலாத்கார வழக்கு.. ஆண்மை பரிசோதனைக்கு செல்லும் பிரபல நடிகர்..

Update: 2022-06-29 08:38 GMT
  • பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவானவர் விஜய் பாபு.
  • துபாயில் இருந்து கேரளா திரும்பிய விஜய்பாபு, சமீபத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

கேரளாவை சேர்ந்த மலையாள சினிமா நடிகர் விஜய்பாபு. இவர் சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் புதுமுக நடிகை ஒருவரை வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த நடிகை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதை அறிந்த நடிகர் விஜய்பாபு வெளிநாட்டில் தலைமறைவானார்.


விஜய் பாபு

அங்கிருந்தபடியே அவர் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறிய நீதிமன்றம், போலீசார் அவரை கைது செய்தால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி சமீபத்தில் எர்ணாகுளம் தெற்கு போலீஸ் நிலையத்தில் நடிகர் விஜய்பாபு விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை முடிந்ததும் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.


விஜய் பாபு

விஜய்பாபுவிடம் வருகிற 3-ந் தேதி வரை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இந்த நிலையில் விஜய்பாபு, நடிகையை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட ஓட்டல் அறைகள் மற்றும் அவரது வீட்டுக்கு நேரில் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.


விஜய் பாபு

அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜய்பாபுவுக்கு ஆண்மை பரிசோதனை செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த பரிசோதனை இன்று அல்லது நாளை அவருக்கு நடைபெற உள்ளது. பாலியல் புகாரில் நடிகர் ஒருவருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்திருப்பது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News