சினிமா செய்திகள்

விஜய் பாபு

காலில் வேண்டுமானாலும் விழுகிறேன்.. கற்பழிப்பு வழக்கை வாபஸ் பெறக்கோரி கெஞ்சிய பிரபல நடிகர்

Update: 2022-06-28 08:13 GMT
  • பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவானவர் விஜய் பாபு.
  • துபாயில் இருந்து கேரளா திரும்பிய விஜய்பாபு, சமீபத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

கேரளாவை சேர்ந்த மலையாள சினிமா நடிகர் விஜய்பாபு. இவர் சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் புதுமுக நடிகை ஒருவரை வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த நடிகை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்த நடிகர் விஜய்பாபு வெளிநாட்டில் தலைமறைவானார்.

விஜய் பாபு

அங்கிருந்தபடியே அவர் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறிய நீதிமன்றம், போலீசார் அவரை கைது செய்தால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி நேற்று எர்ணாகுளம் தெற்கு போலீஸ் நிலையத்தில் நடிகர் விஜய்பாபு விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை முடிந்ததும் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

விஜய் பாபு

இதற்கிடையே தன்மீதான கற்பழிப்பு வழக்கை வாபஸ் பெறும்படி, வழக்கு தொடர்ந்த நடிகையின் உறவு பெண் ஒருவரிடம் நடிகர் விஜய்பாபு பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அந்த ஆடியோவில் பேசும் நபர், நான் விஜய்பாபு பேசுகிறேன் என்றதோடு, தான் பேசுவதை ஒரு 5 நிமிடம் கேட்க வேண்டும் எனக்கூறுகிறார். பின்னர் நடிகையிடம் பேசி, தன் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனக்கூறும் அவர், இதற்காக அவரது காலை வேண்டுமானாலும் பிடிக்கிறேன், அவர் என்னை அடிக்க விரும்பினால், அதனையும் வாங்க காத்திருக்கிறேன்.

விஜய் பாபு

இந்த பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம். இதனால் எனது குடும்பத்தினருக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் தான் அவமானம். நடிகையை நான் மிரட்டியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். நடிகர் விஜய்பாபு பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News