சினிமா செய்திகள்

அமிதாப் பச்சன்

பைக் ஓட்டியிடம் லிப்ட் கேட்டு சென்ற அமிதாப் பச்சன்.. புகைப்படம் வைரல்

Published On 2023-05-15 14:05 IST   |   Update On 2023-05-15 14:05:00 IST
  • இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக உள்ளவர் அமிதாப் பச்சன்.
  • இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் புராஜெக்ட் கே திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.


அமிதாப் பச்சன்

பொதுவாக அமிதாப் பச்சன் படப்பிடிப்பிலும், பொது நிகழ்வுகளிலும் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் கண்டிப்பானவர் என்று கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக சமீபத்தில் தனது வீட்டில் இருந்து ஒரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அமிதாப் பச்சன் காரில் சென்றுள்ளார்.

அப்போது திடீரென ஏற்பட்ட டிராபிக் ஜாமால் அவரது கார் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பிற்கு தாமதமாகி விடும் என்பதை உணர்ந்த அவர் பைக் ஓட்டி ஒருவரிடம் லிப்ட் கேட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார்.


அமிதாப் பதிவு

இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் அமிதாப் பச்சன், "ரைடுக்கு நன்றி நண்பா. நீங்கள் யார் என்று தெரியாது. ஆனாலும் நீங்கள் ஒப்புக்கொண்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வேகமாகவும், தீர்க்க முடியாத டிராபிக் சிக்கல்களை தவிர்த்தும், என்னை கொண்டு வந்து சேர்த்தீர்கள். தொப்பி, ஷார்ட்ஸ், மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்த உங்களுக்கு நன்றி" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.


Tags:    

Similar News