சினிமா செய்திகள்

ஆண் குழந்தைக்கு தாயான இலியானா.. குவியும் வாழ்த்து

Published On 2023-08-06 11:00 IST   |   Update On 2023-08-06 11:00:00 IST
  • விஜய்யின் நண்பன் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் இலியானா.
  • இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருபவர் இலியானா. இவர் 'கேடி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் 'நண்பன்' படத்தில் நடிகர் விஜய்யுடன் ஜோடியாக நடித்து பிரபலமடைந்த இலியானா 'இருக்கானா இடுப்பிருக்கானா' என்ற பாடலுக்கு இடுப்பை ஆட்டி ரசிகர்களை கவர்ந்தார்.


சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் இலியானா, சமீபத்தில் என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என பதிவிட்டு, சாதனை பயணம் தொடங்கி விட்டது என்ற பொருள் அடங்கிய வாசகம் இடம்பெற்ற குழந்தையின் உடையையும் வெளியிட்டிருந்தார்.


இலியானாவிற்கு திருமணமாகாத நிலையில் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகை இலியான சமீபத்தில் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதிலும் ஒரு ட்விஸ்டாக அவரின் பெயர் மற்றும் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை.


இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி தனக்கு மகன் பிறந்ததாக இலியானா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்து 'Koa Phoenix Dola' என பெயர் சூட்டியுள்ளதாகவும் "எங்கள் அன்பு மகனை பூவுலகிற்கு வரவேற்பதில் நாங்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம். அதை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்றும் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News