ஜெயம் ரவி
திருநள்ளாரில் சாமி தரிசனம் செய்த நடிகர் ஜெயம் ரவி
- நடிகர் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் வருகிற மார்ச் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- இதைத்தொடர்ந்து இவர் நடித்த ‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் வெளியாகவுள்ளது.
இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
திருநள்ளாரில் சாமி தரிசனம் செய்த ஜெயம் ரவி
இதைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் உள்ள புகழ் பெற்ற சனீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.