அதிரடியாக உடல் எடையை குறைத்த ரஜிஷா விஜயன்
- மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து பரீட்சையமானவர் நடிகை ரஜிஷா விஜயன்.
- தமிழில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து பரீட்சையமானவர் நடிகை ரஜிஷா விஜயன். 2016 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான அனுராகா கரிக்கின் வெல்லம் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஒரு சினிமாக்காரன், ஜூன், லவ் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.
தமிழில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். அதைத்தொடர்ந்து தமிழில் ஜெய் பீம் மற்றும் சர்தார் திரைப்படத்தில் நடித்தார். தற்பொழுது பைசன் மற்றும் சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரஜிஷா கடந்த 6 மாதங்களாக கடுமையான உடற்பயிற்சி செய்து 15 கிலோ எடையை குறைத்துள்ளார். 15 கிலோ எடை குறித்து ரஜிஷா தற்பொழுது மிகவும் ஃபிட்டாக கூடுதல் அழகோடு காட்சியளிக்கிறார்.
இதனை அவரது உடற்பயிற்சியாளர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் ரஜிஷா இந்த 6 மாதம் எவ்வாறு மிகவும் கட்டுப்பாடுடன் இருந்து உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் எடையை குறைத்தார் என பெருமையாக பதிவுட்டுள்ளார்.