சினிமா செய்திகள்

அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்- மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

Published On 2024-05-24 06:55 GMT   |   Update On 2024-05-24 06:55 GMT
  • பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் இளையராஜா பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் ஆவார்.
  • இளையராஜா அனுப்பியதாக கூறிய நோட்டீஸ் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.

மலையாளத்தில் அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ். நடிகர் கமல் நடித்து 1990-களில் வெளியான குணா படத்தின் கண்மணி அன்போடு என்ற பாடல் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக கூறி மஞ்சுமல் பாய்ஸ் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், "பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் இளையராஜா பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் ஆவார். அதனால் அவரிடம் முறையாக அனுமதி பெற்று பாடலை பயன்படுத்தியிருக்க வேண்டும். அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும். பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாக கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளர் சான் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார். அதில்,

கண்மணி அன்போடு காதலன் பாடலுக்கு உரிய அனுமதி பெற்று தான் பயன்படுத்தி உள்ளோம். இளையராஜா அனுப்பியதாக கூறிய நோட்டீஸ் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News