டோனெட்ஸ்க் பகுதியில் உள்ள டோரெட்ஸ்க் நகரின் மீது... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

டோனெட்ஸ்க் பகுதியில் உள்ள டோரெட்ஸ்க் நகரின் மீது ரஷியா இன்று குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில், பொதுமக்களில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக அவசர சேவை பிரிவு தெரிவித்துள்ளது. இரண்டு மாடி வீட்டின் இடிபாடுகளில் இருந்து ஐந்து உடல்களை மீட்புப் படையினர் மீட்டனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் இறந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைனை ஆக்கிரமித்த ரஷியா, வேண்டுமென்றே பொதுமக்களை குறிவைப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் ரஷியா இதை மறுத்து வருகிறது. 

Update: 2022-07-18 10:18 GMT

Linked news