உக்ரைனின் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் பீரங்கி... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

உக்ரைனின் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் பீரங்கி ஆயுதங்களை அழிப்பதில் கவனம் செலுத்தும்படி படைத் தலைவர்களுக்கு ரஷிய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு உத்தரவிட்டார்.

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் மூலம் ரஷியாவின் வெடிமருந்து கிடங்குகள், எரிவாயு சப்ளை லைன்களை உக்ரைன் படைகள் தாக்கின. இதனால் போர் நடைபெறும் முன்களப் பகுதிக்கு எரிபொருள் மற்றும் வெடிமருந்துகளை எவ்வாறு வழங்குவது என்பதை ரஷியா ஆலோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, உக்ரைனின் நீண்டதூர ஆயுதங்களை அழிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

Update: 2022-07-18 08:53 GMT

Linked news