தென் கிழக்கு உக்ரைனில் உள்ள, ஐரோப்பாவின்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
தென் கிழக்கு உக்ரைனில் உள்ள, ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணு மின் நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ரஷிய படைகள், தற்போது அந்த பகுதியை தனது ராணுவ தளமாக பயன்படுத்திவருகிறது. அங்கு ஏவுகணை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை குவித்து வைத்துள்ள ரஷியா, அங்கிருந்தபடி சுற்றி உள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.
ஜபோரிஜியா அணு உலையில் சுமார் 500 ரஷிய வீரர்கள் முகாமிட்டுள்ளனர். எனினும், அங்கு உக்ரைன் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
Update: 2022-07-16 07:23 GMT