ரஷியாவுடனான போரில் எதிர்த்து போரிடும் வகையில்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

ரஷியாவுடனான போரில் எதிர்த்து போரிடும் வகையில் உக்ரைனுக்கு கூடுதல் பாதுகாப்பு உதவிகளை அமெரிக்கா வழங்கி உள்ளது. அதன்படி ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் கூடுதலாக ஹோவிட்சர்கள், வெடிமருந்துகள், கடலோர பாதுகாப்பு அமைப்புகள், பீரங்கிகளுக்கான உதிரி பாகங்கள், ஆர்ட்டிலரி ராக்கெட் சிஸ்டம்ஸ் உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா இப்போதுவரை உக்ரைனுக்கு சுமார் 6.3 பில்லியன் டாலர் பாதுகாப்பு உதவியை வழங்கியுள்ளதாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் டாட் ப்ரீசீல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-15 23:51 GMT

Linked news