உக்ரைன் ராணுவத்தில் இணைந்து கார்கிவ் பகுதி போரில்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் ராணுவத்தில் இணைந்து கார்கிவ் பகுதி போரில் பங்கேற்று வந்த இரண்டு அமெரிக்கர்கள் கடந்த ஒரு வாரமாக காணாவில்லை என புகார் எழுந்துள்ளது. அவர்கள் ரஷியப் படைகளின் பிடியில் சிக்கியிருக்கலாம் என்று குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர். அலெக்சாண்டர் ஜான்-ராபர்ட் ட்ரூக், மற்றும் ஆண்டி தை என்கோக் ஹுய்ன் ஆகியோர் ஜூன் 9ந்தேதி இஸ்பிட்ஸ்கே நகருக்கு அருகில் உக்ரைன் படைப்பிரிவின் கட்டளையின் கீழ் போரில் பங்கேற்றதாக சிஎன்என் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருவரின் பாஸ்போர்ட்டுகளின் புகைப்படங்கள் மற்றும் உக்ரைனுக்குள் அவர்கள் நுழைந்த முத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Update: 2022-06-15 23:31 GMT