போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியாவுடன் உக்ரைன் ஒரு... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியாவுடன் உக்ரைன் ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறி உள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மால்டோவா உள்பட நேட்டோவின் தெற்குப் பகுதியில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் மேக்ரான். நேற்று ருமேனியா சென்றடைந்த மேக்ரான், நாளை ஜெர்மன் அதிபர் மற்றும் இத்தாலி பிரதமர் ஆகியோருடன் உக்ரைனின் கீவ் நகருக்குச் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷியாவுக்கு எதிரான போரில் மேக்ரான் உக்ரைனுக்கான தனது ஆதரவை தெளிவாக கூறவில்லை என, உக்ரைன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நட்பு நாடுகள் மேக்ரானை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
Update: 2022-06-15 16:59 GMT