உக்ரைனின் கிழக்கு நகரமான சீவியரோடோனெட்ஸ்கில் 80... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைனின் கிழக்கு நகரமான சீவியரோடோனெட்ஸ்கில் 80 சதவீத பகுதிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ரஷிய படைகள் மூன்று பாலங்களையும் அழித்தன. இடைவிடாத வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் போர் காரணமாக பொதுமக்களை பெருமளவில் அங்கிருந்து வெளியேற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. அந்த பகுதியில் சுமார் 12,000 பேர் உள்ளனர். அசோட் ரசாயன ஆலையில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், அசோட் ஆலையில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற மனிதாபிமான அடிப்படை பாதை அமைத்து தரப்படும் என்று ரஷிய ராணுவ ஜெனரல் மிகைல் மிஜின்ட்சேவ் தெரிவித்துள்ளார்.
Update: 2022-06-14 22:51 GMT