ஐரோப்பிய ஒன்றிய அமைப்பில் உக்ரைன் இணைவது குறித்து... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
ஐரோப்பிய ஒன்றிய அமைப்பில் உக்ரைன் இணைவது குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அந்த அமைப்பின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ள அவர், அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அடுத்த வார இறுதிக்குள் எங்களது முடிவு இறுதி செய்யப்படும் என்றும் அப்போது அவர் கூறினார். ரஷியாவின் படையெடுப்பால் உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
Update: 2022-06-11 23:34 GMT