ரஷிய படைகள் கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றுவதற்காக... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
ரஷிய படைகள் கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றுவதற்காக முன்னேற முயற்சிக்கும்போது, அதிக அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் திறன் கொண்ட ஆயுதங்களை பயன்படுத்தலாம் என உக்ரைன் மற்றும் பிரிட்டன் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ரஷிய குண்டுவீச்சு விமானங்கள் 1960-களில் பிரபலமான கனரக கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரைனில் ஏவி இருக்கலாம் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“Kh-22 ஏவுகணைகள் அணு ஆயுதங்களை பயன்படுத்தி விமானம் தாங்கி கப்பல்களை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகளை தரைவழித் தாக்குதல்களில் பயன்படுத்தப்படும் போது, அவை துல்லியமாக இருக்காது. எனவே கடுமையான சேதம் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும்’’ என பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.
Update: 2022-06-11 13:26 GMT