உக்ரைனின் கிரிவி ரிஹ் நகரில் ரஷிய படைகள் தொடர்ந்து... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைனின் கிரிவி ரிஹ் நகரில் ரஷிய படைகள் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருவதாக டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்திய ராணுவ நிர்வாக தலைவர் ரெஸ்னிச்சென்கோ தெரிவித்துள்ளார். இதில் ஆறு பேர் உயிரிழ்ந்தனர். 179 வீடுகள், இரண்டு பள்ளிகள், ஒரு மழலையர் பள்ளி மற்றும் ஒரு மருத்துவமனை ஆகியவை சேதமடைந்தன என்று அவர் கூறினார். அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஏவுகணைத் தாக்குதலால் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தில் சிக்கில் நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், கார்கிவ் நகரில், ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
Update: 2022-06-09 23:23 GMT